நக்ஸல்கள்: விஜய்குமார் தலைமையில்அதிரடிப்படையினர் தொடர்ந்து வேட்டை
பெரியகுளம்:ஐ.ஜி. விஜய்குமார் தலைமையிலான அதிரடிப்படையினர் தேனி மாவட்டம் பெரியகுளம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து நக்சல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல வீரப்பன் நடமாடிய ஒகேனக்கல் காட்டு பகுதியிலும் நக்ஸல்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெரியகுளம் முருகமலைப் பகுதியில் போலீஸாரின் தீவிர வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் தாக்குதலுக்குரிய வரை படங்கள் கிடைத்தன.
பிடிபட்ட இவர்கள் மாவோயிஸ்ட் மற்றும் ஆந்திர நக்சல்களுடன் சேர்ந்து பயங்கர தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
காட்டுப் பகுதிகளில் பதுங்கியுள்ள நக்சலலைட்டுகளைப் பிடிக்கும் பொறுப்பு வீரப்பனை வேட்டையாடிய விஜயகுமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது தலைமையில் சிறப்பு அதிரடிப் படையை அமைத்துள்ளார். இந்தப் படையினர் மூன்று பிரிவாக காட்டுப் பகுதிகளில் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரடிப் படைக்கு பெரியகுளம் காட்டுப்பகுதி புதியது என்பதால், மலைப்பாதை தெரிந்த உள்ளூர் போலீஸார் மற்றும் அப்பகுதி மலைவாழ் மக்கள், பொது மக்களும் உடன் செல்கின்றனர்.
இவர்கள் 3 நாட்களுக்குத் தேவையான உணவை எடுத்து சென்றுள்ளனர்.
இந் நிலையில் சந்தன கட்டை வீரப்பன் நடமாடிய ஒகேனக்கல் காட்டுப் பகுதியிலும் நக்ஸல்கள் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதனால் அங்கும் 25 அதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டாவது நாளாக பேவனூர்பட், வேம்பரத்துக் கோம்பு, குடிப்பட்டி போன்ற இடங்களிலும் குகைகளிலும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே நக்ஸல்கள் பயம் மற்றும் போலீஸாரின் வேட்டையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பெரியகுளத்தையடுத்த த்துப்பாறை, கும்பக்கரை போன்ற அருவிப் பகுதிகள் வெறிச்சோடிப் போய்விட்டன. அங்கு மயான அமைதி நிலவுகிறது.
இந் நிலையில் பிடிபட்ட 3 நக்சலைட்டுகளிடம் தேனி கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
பல வகையிலும் விசாரித்தும் அவர்கள் தங்கள் இயக்கம், செயல்பாடுகள் குறித்து பேச மறுத்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications