ராஜஸ்தானில் அணை உடைந்தது-வெள்ளத்தில் கிராமங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெய்து வரும் கன மழையினால் ஜஸ்வந்த் சாகர் அணை உடைந்து 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அருகே 118 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஜஸ்வந்த சாகர் அணை மிக பலவீனமாக இருந்தது. இந்த அணையில் ஏற்கனவே விரிசல்கள் இருந்தன. இந்நிலையில் கடந்த 2 நாளாக இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், அணை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஜோத்பூர், பாலி,பட்மீர், பட்டோலா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வெள்ளத்தினால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். சில கிராமங்களில் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தை உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications