சேது திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புகேள்விகுறியாகிவிடும் -இராம.கோபாலன்
திருப்பூர்:சேது திட்டத்தினால் நமது கடற்பகுதி சர்வதேச கடல்வழி பாதையாகி பல கப்பல் வந்து செல்லும். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராமர் பாலம் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருந்தது. அதனால் ராமேஸ்வரத்திற்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ராமர் பாலத்தை தகர்த்தால் தமிழக மற்றும் கேரள கடற்கரை பாதிக்கப்படும் என சுனாமி அறிஞர் டாட்மூர்த்தி கூறியுள்ளார்.
இதனால் ராமர் பாலத்தை இடிப்பது சரியல்ல.
ராமர் பாலத்தினால் தமிழக கடற்கரை பகுதியில் அபூர்வ தாதுவான தோரியம் கிடைக்கிறது. ராமர் பாலம் உடைக்கப்பட்டால் இந்த தோரியம் குவியாமல் கடலில் கலந்து விடும் அபாயம் உள்ளது.
சிறிய அணை கட்டுவதில் கூட புவியியல்துறையினரின் ஆலோசனை முக்கியம் என கருத்தும் அரசு ராமர் பால திட்டத்திற்கு புவியியல் துறை புறக்கணிப்பது ஏன்.
சேது திட்டத்தில் பொருளாதார பலன்கள் எதுவுமில்லை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிறிய கப்பல்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும், பெரிய கப்பல்கள் வர முடியாது.
இந்த திட்டத்தினால் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும். நமக்கு சொந்தமான கடல் பகுதி சர்வதேச கடல் எல்லையாக மாறுவதால் எந்த நாட்டு கப்பலும் வந்து செல்லும் நிலை ஏற்படும்.
ராமர் பிறக்காதபோது ராமர் பாலம் எவ்வாறு வந்தது என திமுகவினர் கேட்கின்றனர். ஆனால் அக்கட்சியிலுள்ளவர்கள் ராமசாமி, ராமகிருஷ்ணன் என பெயர் வைத்துள்ளனர். அந்த பெயர் மட்டும் எவ்வாறு வந்தது.
அவர்கள் அந்த பெயரை மாற்ற தயாராக இருக்கிறார்களா.
ராமர் பாலம் வெறும் மணல் திட்டுதான் என்றால், அதன் மீது மோதும் கப்பல் ஏன் உடைந்து போகின்றன.
இந்த பாலத்தை இடித்தால் மத்திய, மாநில அரசுக்களுக்கு ஆபத்து ஏற்படும். நாங்கள் சேது திட்டத்தை எதிர்க்கவில்லை. சேது திட்டம், ராமர் பாலம் என 2ம் எங்களுக்கு தேவை.
இந்த திட்டத்திற்கான மாற்றுவழி இருக்கும் போது ராமர் பாலத்தை உடைப்பது இந்துக்களை பழிவாங்குவதாக உள்ளது.
மதுரையில் வரும் 22ம் தேதி மதுரையில் ராமர் பால பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
ராமர் பாலத்தை உடைக்க விடமாட்டோம். அவ்வாறு மீறி உடைக்க முற்பட்டால் நந்திகிராமம் நிலை தான் நிலை ஏற்படும் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications