நகராட்சித் தலைவர் படுகொலை:சரணடைந்த 2 பேருக்கு போலீஸ் காவல்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டு மூலம் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் என்ஜீனியர் பாலா ஆகியோரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிவகங்கை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சிவகங்கை திமுக நகராட்சித் தலைவர் முருகன் இரு வாரங்களுக்கு முன்பு கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான திமுக கவுன்சிலர் மந்தக்காளையும், பொறியாளர் பாலாவும் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இருவரும் சிவகங்கை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரையும் 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட் அனுராதா, இருவரையும் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக இருவர் சார்பிலும் ஆஜராக வந்த வக்கீல்களுக்கும், சிவகங்கை நீதிமன்ற வக்கீல்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டதால் நிலைமை சரியானது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications