தமிழகம் தப்பி வந்த அமெரிக்க கைதி நாடு கடத்தல்
காஞ்சிபுரம்:அமெரிக்காவிலிருந்து தப்பி தமிழகத்திற்கு ஓடி வந்த கைதியை, போலீஸார் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரைச் சேர்ந்தவர் ஆலன் அரோவிட்ஸ் (52). இவர் குழந்தைகள் மன நல ஆலோசகராக அங்கு பணியாற்றி வந்தார். கடந்த 1982ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை தன்னிடம் சிகிச்சைக்காக வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஆலன் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆலன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆலன், 2004ம் ஆண்டு பரோலில் விடுதலையானார். விடுதலையான பின்னர் அமெரிக்காவிலிருந்து தப்பினார்.
இதையடுத்து ஆலனைக் கைது செய்யுமாறு இன்டர்போல் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்க காவல்துறை உஷார்படுத்தியது. இந்த நிலையில் ஆலன் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு இன்டர்போல் தகவல் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து மகாபலிபுரம் அருகே தலைமறைவாக வசித்து வந்த ஆலனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான பாஸ்போர்ட்டுகள், ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஆலனை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக போலீஸார் ஆலனை, டெல்லி வழியாக அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications