டிரில்லியனர் ஆனார் அனில் அம்பானி
டெல்லி:தொழிலதிபர் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 2வது டிரில்லியனர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.
![]() |
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஆகும். இந்தியாவின் முதல் டிரில்லியனர் என்ற பெருமை முகேஷுக்கு உள்ளது.
இந்த நிலையில், முகேஷின் தம்பி அனில் தற்போது ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி 2வது டிரில்லியனர் ஆகியுள்ளார். அனில் அம்பானியின் நிறுவனங்களின் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்ததால் அவரது பங்குகளின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 334 கோடியாக உயர்ந்துள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மொத்த மார்க்கெட் முதலீடுகள் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 657 கோடியாக உள்ளது. இதில் 67 சதவீதம் பங்குதாரர்களின் மதிப்பாகும். அனில் அம்பானியின் பங்கு ரூ. 74 ஆயிரத்து 354 கோடியாகும்.
ரியஸ் எஸ்டேட் ஜாம்பவானான டி.எல்.எப் நிறுவனத்தின் கே.பி.சிங் சொத்து மதிப்பு ரூ. 85 ஆயிரம் கோடியாக உள்ளது. இவரும் வேகமாக வளர்ந்து அம்பானி சகோதரர்களை எட்டிப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
