வாக்கு சீட்டு கிழிப்பு: 25 கூட்டுறவு சங்கங்களுக்கு மறு தேர்தல்
சென்னை:பல்வேறு முறைகேடுகள் நடந்த 25 கூட்டுறவுச் சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான முதல் கட்டத்தில், மொத்தம் 22 ஆயிரத்து 934 சங்கத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது.
இதன்படி ஜூலை 2ம் தேதி முதல் நிலைத் தேர்தலில் 1945 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கும், இதர 3,994 சங்கங்களுக்கும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 1,921 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், 10,047 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஓட்டுப் பெட்டியைத் தூக்கிச் சென்றது, வாக்குச் சீட்டுக்களை கிழித்தது, வாக்காளர்களிடையே தகராறு செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்த 25 சங்கங்களுக்கு மறு தேர்தல் நடத்தப்படும்.
கூட்டுறவுத் தேர்தல் முடிந்த பிறகு இந்த மறு தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்தல் சுமூகமாக நடந்தது. தோழமைக் கட்சியினர் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அங்கு மறுதேர்தல் நடத்துவோம்.
தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கோ.சி.மணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications