காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாதா?-கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி
திருவள்ளூர்:கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படாததற்காக கர்நாடகத்தைக் கண்டித்து முதல்வர் கருணாநிதி ஏன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
திருவள்ளூரில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தபோது தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று தேர்தல் ஆணையத்தை மிரட்டினார் முதல்வர் கருணாநிதி.
ஆனால் இப்போது காவிரிப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஏன் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கவில்லை?
குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த ஒரு முதல்வரால், பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசி காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா?
நான் மீண்டும் தமிழக கட்சிகளுக்குக் சவால் விடுக்கிறேன். எதிர்வரும் தேர்தல்களில் யாரும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா?
திமுக அரசில், கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் கேலிக் கூத்தாக உள்ளன. சில கட்சிகள் தங்களது சுய லாபத்திற்காக அரசைக் குறை கூறி விமர்சித்து வருகின்றன. சில கட்சிகள் தங்களது பொறுப்புகளை மறந்து ஜால்ரா அடித்துக் காலம் தள்ளி வருகின்றன.
தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதற்கு திமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற திட்டத்தை அரசு அமல்படுத்தினால் இந்த அவல நிலையை ஒழிக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு ஒட்டுக்காக இலவச கலர் டிவிக்கள் தரும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது திமுக அரசு என்றார் விஜயகாந்த்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications