ஜனாதிபதி தேர்தல்- எம்எல்ஏக்கள் வேறு மாநிலத்திலும் வாக்களிக்கலாம்-தேர்தல் ஆணையம்
டெல்லி:எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திலிருந்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம். அதற்கு 96 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் நாடாளுமன்றத்திலுள்ள வாக்குச் சாவடியிலும், எம்எல்ஏக்கள் மாநில தலைநகரங்களிலும் வாக்களிப்பது வழக்கம்.
இதில் எம்பிக்கள் டெல்லியில் வாக்களிக்க முடியவில்லை எனில் மாநில தலைநகரங்களிலும், சொந்த மாநிலங்களில் வாக்களிக்க முடியாத எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று டெல்லி நாடாளுமன்றத்திலும் வாக்களிக்கலாம் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் வாக்கு சீட்டு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஆனால் தற்போது இதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது.
ஒரு எம்எல்ஏ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு மாநிலத்தில் சென்று வாக்களிக்கலாம். இதற்கு 96 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வாக்கு சீட்டுகளை அனுப்புவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் 4 நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, வரும் 19ம் தேதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கங்களை கேட்டிருந்தார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications