சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சில்:இலங்கை அமைச்சர் புது யோசனை
கொழும்பு:சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சிலை நிறுவுவதன் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இலங்கை அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் மகிந்தா விஜேசேகரா யோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறப்புத் திட்டங்களுக்கான அமைச்சராக விஜேசேகரா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாத்தரை நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், இனப் பிரச்சினை தீர்ந்து விடாது.ராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
அதிக அளவிலான அதிகாரங்களுடன் கூடிய, சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சிலை உருவாக்கி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை புலிகளிடம் மொத்தமாக கொடுத்து விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் புதிதாக அமையும் தமிழ் கவுன்சிலில் புலிகளுக்கும் இடம் கொடுக்கலாம்.
நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய யோசனைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
விலைவாசியும், செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், போர்ச் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் குறைந்தது ரூ. 65 ஆயிரம் செலவாகிறது.
ஆயுதங்கள், குண்டுகள் வாங்க அதிக கடன் வாங்கப்படுகிறது. இந்தக் கடன் தொகைக்கான வட்டித் தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆட வைக்கும அளவுக்கு அதிகரித்து வருகிறது.
எனவே இனப் பிரச்சினைக்கு உடனடியாக, இறுதியான தீர்வு காண வேண்டியது நமது நாட்டுக்கு நல்லது என்றார் விஜேசேகரா.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications