ஜெயலலிதாவுடன் மம்தா திடீர் சந்திப்பு
சென்னை:திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று விட்டு கொல்கத்தா திரும்பும் வழியில் மம்தா பானர்ஜி திடீரென சென்னை வந்தார். போயஸ் தோட்டத்தில் அவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |
ஆனால் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவிக்கையில்,
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாங்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்டேன். மேற்கு வங்கத்தில் சிங்குர் மற்றும் நந்திகிராம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்களை கைப்பற்றி தொழிற்சாலை அமைப்பதற்கு ஆளும் அரசு அனுமதி கொடுத்ததை எதிர்த்து தொடர்ந்து எங்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 21-ம் தேதி கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவை அழைத்துள்ளேன்.
அவர் தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிராக ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை என்னிடம் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரசும் அதிமுகவும் தோழமைக் கட்சிகள். இதனால் அதிமுகவுக்கு எப்போதும் திரிணமுல் காங்கிரஸின் ஆதரவு உண்டு.
நாங்கள் கம்யூனிஸ்ட்களை எதிர்க்கிறோம். ஆனால், அவர்களுடன் ஜெயலலிதா நட்புறவு கொள்ள விரும்புகிறார். இதில் தவறு கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. இதனால் எங்கள் நட்புறவு பாதிக்காது என்றார்.
நாங்கள் கலாம் அவர்களை மட்டும் தான் ஆதரிக்கிறோம். ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக அவர் ஜனாதிபதியாக தொடர விரும்பவில்லைல. துணைக் குடியரசு தேர்வுக்கு யாரை ஆதரிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் மம்தா.
இச் சந்திப்பின்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தினேஷ் திரிவேதியும் உடன் இருந்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!













Click it and Unblock the Notifications