முல்லை பெரியாறு, இடுக்கியில் நக்சல்கள்?
தேனி:பெரியகுளம் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிய நக்சல்கள் இடுக்கி, மூணாறு மற்றும் முல்லை பெரியாறு (குமுளி-தேக்கடி) வனப் பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் முருகமலை வனப்பகுதிகளில் ஆயுதப்பயிற்சி எடுத்த 3 நக்சல்களை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர்.
இவர்களை பிடிக்க அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.
அவரது தலைமையில் கடந்த 4 நாட்களாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிய நக்சலைட்டுகள் பெரியகுளம் வனப் பகுதியை தவிர, ஒகேனக்கல் மற்றும் வருசநாடு வனப் பகுதியிலும் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந் நிலையில் விஜய்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிரடிப் படை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அதிக நக்சல்கள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் நாமக்கல், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக-கேரள எல்லையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியான இடுக்கி, மூணாறு போன்ற பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் கேரள போலீஸாரின் உதவியைக் கேட்போம்.
தர்மபுரி மற்றும் ஆந்திர எல்லையிலும் 550 போலீஸார் கேமரா, அதிநவீன துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலா 12 போலீஸார் கொண்ட 40 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.
வன கிராமப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது. ஏனென்றால் நக்சல்கள் படித்த இளைஞர்கள் போல் வேடமிட்டு கிராமத்தில் உள்ள குறிப்பாக படித்த இளைஞர்களை பிரெயின் வாஷ் செய்து வருகின்றனர்.
நக்சல் தீவிரவாதிகளை பிடிக்க மலைவாழ் மக்களும், கிராம இளைஞர்களும் போலீஸ் மற்றும் அதிரடிப் படையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications