காவிரி பாதுகாப்பு குழு அமைக்கராமதாஸ் யோசனை
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அனைத்துக் கட்சியினரும் அடங்கிய காவிரி உரிமை பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்க உடனடியாக காவிரி உரிமை பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.
இப்படி ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இப்பிரச்சினையில் நிச்சயம் நமது பக்கத்து நீதியை நிலைநாட்ட முடியும்.
கர்நாடக அரசுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது நாம் அனுபவப் பூர்வமாக கண்ட ஒன்று. எனவே கர்நாடக அரசுடன் இனி பேச்சே நடத்தக் கூடாது.
கடந்த 30 வருடங்களில் இதுதொடர்பாக இரு தரப்பிலிரும் 35 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட உடன்பாடு ஏற்பட்டதில்லை.
இதுதவிர சமீபத்தில் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பையும் கூட கர்நாடக அரசு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் கர்நாடகத்துடன் நாம் பேச்சே நடத்தக் கூடாது. அதில் எந்த அர்த்தமும் இல்லை.
அனைத்து அரசியல் கட்சிகளும் கரம் கோர்த்து, இந்தப் பிரச்சினையில் இணைந்து செயல்பட்டு, நமது விவசாயிகளுக்கு நீதியை நிலைநாட்ட உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications