இட ஒதுக்கீடு: கருணாநிதிக்கு எதிரான வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லிபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதுதொடர்பாக கே.ஆர்.ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில்,
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடுமையாக விமர்சித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மீது சாதாரண மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக கருணாநிதியின் பேச்சு உள்ளது.
இரண்டு அல்லது மூன்று பேர் (நீதிபதிகள்) சேர்ந்து 100 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் கேடு என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.
இப்படிக் கூறுவதற்கு கருணாநிதிக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. முதல்வர் பொறுப்பில் உள்ள அவர் இதன் மூலம் பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி விட்டார்.
எனவே முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்காக யாரையும் தண்டிக்க முடியாது என்று கூறி ராமசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications