நகராட்சித் தலைவர் கொலை: சிவகங்கை தெப்பக்குளத்தில் குண்டுகள்!!!
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகனைக் கொலை செய்வதற்காக வாங்கப்பட்ட வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டிகள் அங்குள்ள தெப்பக்குளத்திலிருந்து மீட்கப்பட்டன.
சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை, என்ஜீனியர் பாலா ஆகிய இருவரும் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கேபிள் டிவி தொழில் போட்டி காரணமாக கொன்றதாக இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.
மேலும் எப்படி கார் வெடிகுண்டைத் தயாரித்தோம், எப்படி வெடிக்க வைத்தோம் என்பதையும் இருவரும் விவரித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் நேரடியாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது கார் குண்டு தயாரிப்பதற்காக வாங்கி வந்த 3 வெடிகுண்டுப் பெட்டிகளில் இரண்டை, தெப்பக்குளத்தில் போட்டுள்ளதாக மந்தக்காளை தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் தெப்பக்குளத்தில் வீசப்பட்ட இரு பெட்டிகளையும் கைப்பற்றினர்.
வெடிகுண்டு நிபுணர்களும், தீயணைப்புப் படையினரும் இணைந்து இந்த வெடிகுண்டுப் பெட்டிகளை மீட்டனர்.
இந்தப் பெட்டியில் வெடிபொருட்களை நிரப்பி, மின்சார இணைப்பு கொடுத்து, பின்பு பேட்டரியில் இணைப்பு ஏற்படுத்தி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்துள்ளார் பாலா.
இதுதவிர மந்தக்காளை வீட்டுக் கிணற்றிலிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், மின்னணு உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலைத் திட்டத்திற்குத் தேவையான வெடிபொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து இவர்கள் வாங்கியுள்ளனர். பின்னர் வாஸ்தாபட்டி காட்டுக்குள் டம்மி வெடிகுண்டை வெடித்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் திருப்தி வராததால், இன்னொரு இடத்திற்குப் போய் டெஸ்ட் செய்துள்ளனர்.
தொடர்ந்து மந்தக்காளை மற்றும் பாலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications