விம்பிள்டனில் பெடரர் புதிய சாதனை
விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து ஐந்து முறையாக வென்று, முன்னாள் வீரர் ஜோர்ன் போர்க் சாதனையை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முறியடித்துள்ளார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமானதாக கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ். நேற்று ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நடந்தது.
![]() |
இதில் சுவிஸ் வீரர் பெடரரும், ஸ்பெயின் வீரர் ரபேல் நாடலும் மோதினர். பெடரர் முதல் நிலை வீரர் ஆவார். நாடல் 2வது நிலை வீரர் ஆவார். இதனால் இருவரில் வெல்லப் போவது யார் என்பதில் ரசிகர்களிடையே பெரும் ஆவல் நிலவியது.
தொடக்கத்திலிருந்தே ஆட்டம் படு விறுவிறுப்பாக போனது. முதல் நான்கு செட்களில் இருவரும் தலா இரண்டு செட்களை கைப்பற்றியதால் ஆட்டத்தால் விறுவிறுப்பு கூடியது.
இந்த நிலையில் 5வது செட்டை இருவரும் உத்வேகத்துடன் ஆடினர். ஆனால் பெடரரின் ஆவேச ஆட்டத்துக்கு முன்னால் நாடல் சமாளிக்க முடியாமல் திணறி இறுதியில் செட்டை இழந்து சாம்பியன் பட்டத்தையும் நாடலிடம் பறிகொடுத்தார்.
இந்த வெற்றி பெடரருக்கு 11வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். அத்தோடுத தொடர்ச்சியாக விம்பிள்டனில் அவர் பெறும் 5வது சாம்பியன் பட்டமும் ஆகும்.
இதன் மூலம் சுவீடனின் ஜோன் போர்க் (1976-1980) இதற்கு முன்பு செய்த சாதனையை பெடரர் சமன் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பெடரர் தனது சாதனையை சமன் செய்ததை போர்க்கும் நேரடியாக கண்டு மகிழ்ந்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்













Click it and Unblock the Notifications