ஆஸ்திரேலிய போலீஸ் பெங்களூர் வருகை:ஹனீப்பின் பெற்றோரிடம் விசாரணை
மெல்போர்ன்:இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் போக்கு அதிருப்தி அளிப்பதாக உள்ளதாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய டாக்டர் முகம்மது ஹனீப்பை ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னும் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் கைது செய்து வைத்துள்ளனர்.
![]() |
அவருக்கு இதுவரை இரு முறை காவல் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹனீப் தொடர்பான விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் வெளிநாட்டு டாக்டர்கள் அமைப்பும் ஆஸ்திரேலிய போலீஸாரின் நடவடிக்கை பெரும் அதிருப்தி தரும் விதமாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ஆண்ட்ரூ ஸ்வார்ட்ஸ் கூறுகையில், விசாரணையின் போக்கு, இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்களில் வெளியாகும் செய்திகள் எங்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளன.
டாக்டர்கள் மீதான குற்றச்சாட்டு, கைது நடவடிக்கை, விசாரணை போன்றவை, ஆஸ்திரேலியாவுக்கு வர நினைக்கும் வெளிநாட்டு டாக்டர்களை தடுத்து நிறுத்தி விடும். இதனால் ஆஸ்திரேலியாவில் மோசமான நிலை உருவாகக் கூடும்.
வெளிநாட்டு டாக்டர்கள்தான் ஆஸ்திரேலியாவின் மருத்துவ சேவையை பெருமளவில் பூர்த்தி செய்பவர்களாக உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் கவலை தருவதாக உள்ளன.
இந்த நிகழ்வுகள், ஆஸ்திரேலிய மக்கள் மீதான வெளிநாட்டவரின் நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் வெளிநாட்டு டாக்டர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது என்றார் ஸ்வார்ட்ஸ்.
ஆஸ்திரேலிய போலீஸ் பெங்களூர் வருகை
இதற்கிடையில் டாக்டர் ஹனீப்பிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
அவர் பெங்களூரில் ஹனீப்பின் பெற்றோர்கள், உறவினர்களிடமும், ஹனீப்புடன் படித்த நண்பர்களிடமும் விசாரணை நடத்தவுள்ளார்.













Click it and Unblock the Notifications