காவிரி: கர்நாடகம் தொடர்ந்த வழக்கு-இன்று விசாரணை
பெங்களூரு:கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுமீது இன்று விசாரணை ஆரம்பமாகின்றது.
16 ஆண்டு விசாரணைக்குப் பின் கடந்த பிப்ரவரி 5ம் தேதி காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது.
இதில் கர்நாடகத்துக்கு 272 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 5 டிஎம்சி, மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக 10 டிஎம்சி நீரை காவிரி ஆற்றிலேயே விட்டு வைக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. (அன்று தடை செய்யப்பட்ட சன் நியூஸ் தொலைக்காட்சியை இன்று வரை பெங்களூரில் ஒளிபரப்ப மறுத்து வருகின்றனர்).
இதையடுத்து கர்நாடக அரசின் சார்பில் இது குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,
கர்நாடகத்தின் பாசனப் பகுதியை குறைத்து கணக்கில் எடுத்துக் கொண்டும், கேரளத்துக்கு கொடுக்கப்பட்ட நீரை தமிழகமே பாவிக்கும் வகையிலும் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவிரியில் இருந்து தான் பெரும்பாலான குடிநீர் திட்டங்கள் கர்நாடகத்தில் நிறைவேற்றப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான மோகன் கதரகி, பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் மற்றும் கர்நாடக அட்வகேட் ஜெனரல் உதய ஹொள்ளா ஆகியோர் ஆஜராகின்றனர்.












Click it and Unblock the Notifications