சந்திரசேகர் உடல் தகனம்-தலைவர்கள் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் உடல் நேற்று மாலை டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

டெல்லியில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் உடல் நேற்று மாலை ராஜ்காட் அருகே உள்ள ஏக்தா ஸ்தலத்தில் முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.

Chandra Shekhar cremated with full state honours

குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவெகெளடா, அத்வானி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சந்திரசேகரின் இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக ஏக்தா ஸ்தலத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மகன்கள் பங்கஜ் சிங், நீரஜ் சிங் ஆகியோர் தீமூட்டினர். அப்போது 21 குண்டுகள் முழக்கப்பட்டன.

உடல் தகன நிகழ்ச்சியில் சந்திரசேகரின் சொந்த ஊரான உ.பி. மாநிலம் பாலியாவிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது மண்ணின் மைந்தனுக்கு இறுதி விடை கொடுத்தனர்.

சந்திரசேகர் உடல் தகனத்தையொட்டி டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நேற்று பிற்பகலுடன் மூடப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+