சிறையில் மகனுக்கு கஞ்சா சப்ளை செய்த தாய்!!!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மத்திய சிறையில் உள்ள மகனுக்கு கஞ்சா சப்ளை செய்த தாயை போலீஸார் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த கொடிப்பள்ளத்தை சேர்ந்த கொலைக் கைதி மாரியப்பன் (வயது 35). சேலம் மத்திய சிறையில் இருக்கும் இவரை பார்க்க அவரது அம்மா பார்வதி (வயது 52) சிறைக் காவலரிடம் அனுமதி கேட்டு காத்திருந்தார்.
தனது மகனை பார்க்க பழம் மற்றும் பிரட்டை கொண்டு வந்தார். சிறைக் காவலர் அதை சோதனை செய்தனர். அப்போது பார்வதி திருதிரு வென முழித்தார்.
சிறைக் காவலர்கள் சந்தேகமடைந்து பிரட் பாக்கெட்டை மீண்டும் சோதனை செய்ததில், பிரட் துண்டுகளுக்கு இடையே கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக்கண்ட சிறை காவலர்கள் அவரை அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து கஞ்சா வழக்கில் பார்வதி சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications