திருமணமான ராணுவத்தினருக்கு புதிய குடியிருப்பு!
சென்னை:ராணுவ அதிகாரிகள் திருமணத்திற்கு பின் குடும்பத்தோடு தங்குவதற்கு சென்னையில் புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இந்தத் திட்டத்தினை குறித்து மூத்த ராணுவ அதிகாரியான பிரிகேடியர் வி.என்.மணி, நிருபர்களிடம் கூறியதாவது,
திருமணமான ராணுவ அதிகாரிகள் தங்கும் குடியிருப்புகள் சென்னையில் பல்லாவரம், நந்தம்பாக்கம் மற்றும் ஐலேண்ட் கிரவுண்டில் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் 304 குடியிருப்புகள் கட்டப்படும். இந்த திட்டம் இரண்டு பிரிவாக நிறைவேற்றப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ. 34.71 கோடி.
முதல் திட்டத்தின் கீழ் பல்லாவரத்தில் 124 வீடுகள் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் அனைத்து நிலையில் உள்ள ராணுவ வீரர்களுக்கும் தரப்படும்.இந்த குடியிருப்புகள் அனைத்திலும் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கும்.
இரண்டாவது கட்டமாக கட்டப்பட உள்ள திட்டத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், விளையாட்டு மைதானம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவையும் அடங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications