என்னை வேதனைப்படுத்துவதால்யாருக்கும் லாபம் இல்லை- நரேஷ் குப்தா
Subscribe to Oneindia Tamil
சென்னை:என்னை வேதனைப்படுத்தி பேனர் வைப்பதால் யாருக்கும் லாபம் கிடைக்கப் போவதில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் தொடர்பாக நரேஷ் குப்தாவின் வீட்டுக்கு முன்பாக அவரை விமர்சித்து திமுகவினர் பேனர் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பேனர் குறித்து நரேஷ் குப்தா கூறுகையில், ஜீரோ சம் என்ற ஒரு விளையாட்டு உள்ளது. இதில் ஒருவர் இழக்கும் புள்ளிகள், அடுத்தவருக்கு லாபமாக போய்ச் சேரும்.
இப்போது நடப்பது அது போன்ற விளையாட்டு அல்ல. எனக்கு ஏற்படும் நஷ்டம் அவர்களுக்கு லாபம் தராது. நான் ஐந்து புள்ளிகளை இழந்தால், அவர்களுக்கு அந்தப் புள்ளிகள் கிடைக்காது.
என்னை வேதனைப்படுத்திப் பார்ப்பதன் மூலம் யாருக்கும் லாபம் கிடைக்கப் போவது இல்லை. எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்றார் குப்தா.












Click it and Unblock the Notifications