உமர் அப்துல்லா மீது குண்டு வீச்சு:மயிரிழையில் உயிர் தப்பினார்
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகனும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவைக் கொல்ல நடந்த முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நேற்று தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உமர் அப்துல்லா பேசினார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய உமர், கிராலிகுந்த் என்ற இடத்திற்குச் சென்றார்.
![]() |
அங்குள்ள கட்சிப் பிரமுகர் ஒருவரது வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது சில அடையாளம் தெரியாத தீவிரவாதிகள், அந்த வீட்டின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர்.
பயங்கர சப்தத்துடன் அந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. ஆனால் உமர் அப்துல்லாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. உமர் இருந்த இடத்திற்கு 300 மீட்டர் தொலைவிலேயே அவை வெடித்ததால் உமர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டது.













Click it and Unblock the Notifications