விஜய்காந்தை சந்தித்தார் பெர்னான்டஸ்:ஷெகாவத்துக்கு தேமுதிக ஆதரவு?
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேரில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாகவும், ஷெகாவத்துக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
3வது அணி என்ன செய்யப் ேபாகிறது என்பது தெரியவில்லை. ஷெகாவத்துக்கு ஆதரவு தருவார்களா அல்லது தேர்தலைப் புறக்கணிப்பார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந் நிலையில் தமிழகத்தைச் ேசர்ந்த குட்டிக் கட்சி ஒன்றின் தலைவரைப் பார்க்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று சென்னைக்கு வந்தார். அவர் பார்க்க வந்தது, கேப்டன் விஜயகாந்த்தைத்தான்.
விஜயகாந்த் மட்டுமே தேமுதிகவின் ஒரே எம்.எல்.ஏ. என்றாலும் கூட அந்தக் கட்சியின் அபரிமிதமான வளர்ச்சிைய மதித்தும், விஜயகாந்த்தின் விஸ்வரூபம் விரைவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், எதிர்காலத்தில் விஜயகாந்த்துடன் அணி சேரும் திட்டத்துடனும் , விஜயகாந்த்தைத் தேடி பெர்னாண்டஸ் சென்னைக்கு வந்தார்.
இருவரும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது ஷெகாவத்துக்கு விஜயகாந்த் ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இருப்பினும் ெபர்னாண்டஸிடம் விஜயகாந்த் தனது கட்சியின் நிலை குறித்து உடனடியாகத் ெதரிவிக்கவில்லை.
ஏற்கனவே மனசாட்சிப்படி வாக்களிக்கப் ேபாவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். இருப்பினும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியே தன்னைத் தேடி ஆதரவு கேட்டு வந்துள்ள நிலையில், எதிர்கால அரசியல் வளர்ச்சியையும் கருத்தில் ெகாண்டு ஷெகாவத்துக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இரு திராவிடக் கட்சிகளும் கழற்றிவிட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே விஜய்காந்தை வளைக்க பாஜக முயன்றது. ஆனால், அவர் நழுவிவிட்டார். இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலை வைத்து அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications