கர்நாடக தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டை அணுகதமிழகத்திற்கு நடுவர் மன்றம் யோசனை
டெல்லி:காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தமிழக அரசுக்கு காவிரி நடுவர் மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சனையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி தனது இறுதி தீர்ப்பை அளித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகம் அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தது. மேலும் காவிரி நடுவர் மன்றத்திடமும் மனு தாக்கல் செய்தன.
நேற்று இந்த மனு குறித்து விசாரிக்க காவிரி நடுவர் மன்றம், அதன் தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.பி.சிங் தலைமையில் கூடியது. அப்போது தமிழகத்தின் சார்பில் வழக்கறிஞர் பராசரன், கர்நாடகம் சார்பில் வழக்கறிஞர் அனில் திவாகர், கேரளா சார்பில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆகியோர் ஆஜராயினர்.
காவிரி நீர் பாசன பகுதிகளில் கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நடுவர் மன்றத்திடம் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களைப் பரிசீலித்த நடுவர் மன்ற உறுப்பினர்கள், காவிரி நதிநீர் தொடர்பாக 3 மாநிலங்களும் தாக்கல் செய்துள்ள ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருப்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே 3 மாநில அரசுளும் தற்ேபாது தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.
காவிரி பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பதால் இதில் நடுவர் மன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உறுப்பினர்கள் ெதரிவித்தனர்.
பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த கர்நாடக அரசின் தடுப்பணகள் குறித்த மனுவைப் பரிசீலித்த நடுவர் மன்ற உறுப்பினர்கள், தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு பெறலாம் என்று ெதரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications