25ம் தேதி மேட்டூர் அணை திறப்பு:முதல்வர் கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரிப் பாசனப் பகுதி விவசாயப் பணிகளுக்காக வருகிற 25ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் தற்போது 54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு சராசரியாக விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால், அணைக்கு மேலும் அதிக நீர் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசனத்திற்காக வருகிற 25ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 91 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 29 ஆயிரத்து 419 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications