புறநகர் ரயில்கள் பழைய நேர அட்டவணைப்படி இயங்கும்-வேலு
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களின் நேர மாற்றத்திற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இனி பழைய அட்டவணைப்படியே ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை இணையமைச்சர் வேலு அறிவித்துள்ளார்.
சென்னை புறநகர் மற்றும் அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்று வர இந்த புறநகர் ரயில்களையே பெருமளவு நம்பியுள்ளனர்.
ஆனால், தெற்கு ரயில்வே இந்த புறநகர் ரயில்களின் நேர அட்டவணையில் கடந்த 1ம் தேதி சில மாற்றங்களை செய்தது. முன்னறிவிப்பு ஏதுமின்றி செய்யப்பட்ட இந்த நேர மாறுதலால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
இதையடுத்து ஆங்காங்கே பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து ரயில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் மீண்டும் பழைய நேர அட்டவணைப்படியே இயங்கும் என வேலு அறிவித்துள்ளார்.
குழப்படி செய்த ரயில்வே அதிகாரிகளையும் அவர் கடிந்து கொண்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications