லிபியாவில் இந்திய டாக்டர்களுக்கு திடீர் சிக்கல்!!

Subscribe to Oneindia Tamil

லிபியா:லிபியாவில் பணியாற்றச் செல்லும் இந்திய டாக்டர்களுக்கு இதுவரை வழங்கி வந்த சலுகைகளை லிபிய அரசு நிறுத்தி விட்டதால், அவர்கள் பெரும் அதிருப்தியும், அவதியும் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் முக்கிய எதிரிகளில் ஒன்று லிபியா. பல ஆண்டுகளாக முகம்மது கடாபியின் ஆட்சிப் பொறுப்பின் கீழ் உள்ள லிபியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். இதுவரை இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது வேலைக்கான ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

இங்கு பணியாற்றும் டாக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில்தான் பணியாற்றுகிறார்கள். ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் அவர்களின் காண்டிராக்ட் புதுப்பிக்கப்படும்.

இந்த நிலையில் காண்டிராக்டை புதுப்பிக்க வேண்டும் என்றால் இந்தியாவுக்குச் சென்று வந்தால்தான் புதுப்பிக்க முடியும் என்று இந்திய டாக்டர்களை வேலைக்கு நியமித்த அல்சிராஜ் கன்சல்டன்சி என்ற நிறுவனம் தெரிவித்துள்து.

இதனால் இந்திய டாக்டர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தமிழகம், ஆந்திரா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் லிபியாவில் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் குறித்து டாக்டர் வேணுகோபால் ராவ் என்பவர் கூறுகையில், எங்களது பிரச்சினை குறித்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளோம்.

இங்கு வேலை பார்க்கும் அனைவரும் புதுப்பிக்க தேவையில்லாத வேலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பணிக்கு வந்தோம். ஆனால் இங்கு பணிபுரிந்துவிட்டு லீவுக்கு செல்லும் டாக்டர்கள் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.

லிபிய அரசு முன்பு பல சலுகைகளை வழங்கி வந்தது. 3 வருடம் தொடர்ந்து வேலை பார்த்தால் 50 நாளுக்குரிய சம்பளத்தை கூடுதலாக தந்தது. இதற்கு முந்தைய காண்ட்ராக்ட்டில் கூட முதல் 4 வருடங்கள் தொடர்ந்து வேலை பார்த்தால் 100 சதவீதம் சலுகையாக 2 மாத சம்பளத்தை கூடுதலாக வழங்கி வந்தது.

இந்திய டாக்டர்கள், தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் (3 குழந்தைள் வரை) லிபியாவுக்கு வருவதற்கும், இங்கிருந்து ஊருக்குப் போவதற்கும் விமான டிக்கெட் தருவதாக உறுதி அளித்திருந்ததது. ஆனால் இப்போது, லிபியாவை விட்டு போகும்போது மட்டுமே டிக்கெட் சலுகை அளிக்கப்படும் என கூறி விட்டது.

வேலைக்கு வரும் டாக்டர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் உள்ள வீட்டை தருவதாக கூறியது. அப்படி இல்லையெனில் திருமணமானவருக்கு 2 மாத சம்பளமும், கல்யாணமாகதவருக்கு 1 மாத சம்பளமும் கொடுத்து வந்தது. மேலும் தற்போது குடிநீருக்கு 25 லிபிய டாலரிலிருந்து 135 லிபிய டாலராகவும் அறிவித்திருந்தனற்.

ஆனால் இதுவரை கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் தற்போது கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய டாக்டர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் என்றார் ராவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+