3வது அணிக்கு மீண்டும் சறுக்கல்:து.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பரூக் மறுப்பு
ஸ்ரீநகர்:துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜெயலலிதாவை உள்ளடக்கிய 3வது அணி விடுத்த கோரிக்கையை ஏற்க தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மறுத்துவிட்டார்.
ஆகஸ்டு 10ம் தேதி நடைபெறவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவை நிறுத்த 3வது அணியின் தலைவர்கள் யோசனை கூறினர். ஆனால் அதை பரூக் ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (மூன்றாவது அணி) சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.
![]() |
காஷ்மீரில் வரும் சட்டசபை தேர்தலில் என் கட்சிக்காக பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் நான் மறுத்தேன். இருந்தாலும் டெல்லியில் 14ம் தேதி நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் கலந்துக் கொள்வேன் என்றார்.
முதலில் பாத்திமா பீவியையும் பின்னர் அப்துல் கலாமையும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த இக் கூட்டணி முயனறது. பாத்திமா பீவிக்கு ஜெயலலிதாவைத் தவிர யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை. அதே போல அப்துல் கலாமிடம் பேசாமலேயே அவரது பெயரை இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தது இந்தக் கூட்டணி.
இப்போது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று எந்த முடிவையும் இக் கூட்டணி எடுக்கவில்லை. சுயேச்சை ஷெகாவத்துக்கு இவர்களது ஆதரவைப் பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இந் நிலையில் தான் பரூக் அப்துல்லாவை துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த இக் கூட்டணி முயன்று தோல்வி கண்டுள்ளது.













Click it and Unblock the Notifications