ருஷ்டிக்கு சர் பட்டம்- டென்ஷனான தீவிரவாதி கபீல்
லண்டன்:சல்மான ருஷ்டிக்கு இங்கிலாந்து அரசு சர் பட்டம் கொடுத்ததை கண்டிக்கும் வகையில் தான் இங்கிலாந்தில் குண்டுவெடிப்புகளை நடத்த கபீல் உள்ளிட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
கிளாஸ்கோ விமான நிலைய கார் தாக்குதல் மற்றும் லண்டனில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஆகியவற்றில் தொடர்புடைய லண்டனில் வசித்த சகோதரர்கள் கபீல் அகமது, சபீல் அகமது மற்றும் அவர்களின் உறவினரான ஆஸ்திரேலியாவில் வசித்த ஹனீப் ஆகியோர் பிடிபட்டுள்ளனர்.
![]() |
இதில் கபீல் அகமது என்பவன் தான் எரியும் நிலையில் ஜீப்பை ஓட்டி கிளாஸ்கோ விமான நிலையத்தில் மோதச் செய்தவர் ஆவார். காரில் இருந்த குண்டு வெடிக்காததால் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இப்போது 90 சதவீத தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கபீலின் தம்பி சபீல் அகமதுவும் இங்கிலாந்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். மேலும் இவர்களுடன் தொடர்புடைய டாக்டர் ஹனீப்பும் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் இந்தியா கிளம்பும் நேரத்தில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
![]() |
தப்லி கி ஜமாத் அமைப்பின் தீவிர உறுப்பினரான கபீலுக்கு லண்டனில் கிடைத்த சில நண்பர்கள் மூலமாக அல்-கொய்தா அமைப்புடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சல்மான் ருஷ்டிக்கு இங்கிலாந்து அரசு சமீபத்தில் சர் பட்டத்தை கொடுத்து கெளரவம் செய்தது. இதை கபீலால் ஜீரணிக்க முடியாமல் போயிருக்கிறது.
இதையடுத்துத் தான் தீவிரவாத தாக்குதல் நடத்த கபீல் திட்டமிட்டதாக இங்கிலாந்து மற்றும் இந்திய உளவுப் பிரிவுகள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் அவரது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் கிடைத்துள்ள தகவல்கள் இதை உறுதி செய்துள்ளன.
இதற்கிடையே, கபீல் அகமதுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் இங்கிலாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications