ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய புலிகள்
கொழும்பு:இலங்கைய போர் விமானத்தை விடுதலைப் புலிகள் பீரங்கி மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் புலிகளின் வனப் பகுதி முகாமை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் புலிகள் இந்த பதிலடியை கொடுத்துள்ளனர்.வவுனியாவில் புலிகளின் முகாம் மீது நேற்று ராணுவத்தின் கிபீர் ரக விமானம் தாக்குதல் நடத்தியபோது, புலிகள் விமான எதிர்ப்பு பீரங்கிகளால் சுட்டு அந்த விமானத்தை வீழ்த்தினர். இதில் விமானம் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இத் தாக்குதலில் விமானியும் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
விழுந்து சிதறிய விமானத்தின் பாகங்களை புலிகள் கைப்பற்றி அதன் படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த விமானங்கள் இஸ்ரேலில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தைகளை தொடங்க நார்வே தீவிரமாக முயன்று வருகிறது.
இதுகுறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில்,
அதிபர் ராஜபக்ஷேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது. அரசின் பொருளாதார நிலைகளை தாக்குவதே எங்கள் நோக்கம்.
மட்டக்களப்பில் குடும்பி மலையின் காட்டுப் பகுதியை கைப்பற்றியதற்கே ஏதோ ஒரு நாட்டையே கைப்பற்றியது போல் ஒரு தோற்றத்தை ராணுவம் ஏற்படுத்த முனைகிறது. 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துபோய் விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications