திட்டமிட்டபடி பி.இ. கவுன்சிலிங்: பொன்முடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:திட்டமிட்டபடி வரும் 18ம் தேதி பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஆரம்பமாகும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் கவுன்சிலிங்கில் கடந்த ஆண்டு என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ அதையே தொடர வேண்டுமென்றும், மேலும் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட சில முக்கிய ஆணைகள் செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மைனாரிட்டி சுயநிதிக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை கல்லூரி நிர்வாகமும், மீத 50 சதவீதத்தை அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றைச் சாளர அடிப்படையில் நிரப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் மைனாரிட்டி இல்லாத கல்லூரிகளில் 20 சதவீதம் கல்லூரி நிர்வாகமும், 15 சதவீதம் என்.ஆர்.ஐ. பிரிவை சேர்ந்தவர்களுக்கும் மீதம் 65 சதவீத இடத்தை அரசின் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கேற்பவே தமிழக அரசு இந்த உத்தரவு பிறப்பித்தது.

இதன் அடிப்படையில் சுயநிதிக் கல்லூரிகள் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்க முடியாது, அதனால் இந்த சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.

ஆனால் இதை எதிர்க்கும் வகையில் தமிழக அரசின் இந்த உத்தரவே செல்லாது என உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு சுயநிதி கல்லூரிகளின் உரிமையாளர்கள் மனு செய்திருந்தனர். இதற்கு ஆதரவாகவும் அவர்களுக்கு தீர்ப்பு வந்துள்ளது.

மேலும் இந்த தீர்ப்பில் சில முக்கிய ஷரத்துக்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றற பெஞ்ச் கூறினாலும், மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை போலவே இருக்கும் என தீர்ப்பளித்துள்ளது. அதனால் பொறியியல் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை திட்டமிட்டப்படி வரும் 18-ம்தேதி நடைபெறும்.

மாணவர்களின் நலனை பாதிக்கும் எந்த ஒரு தீர்ப்பையும் அரசு பார்த்து கொண்டிருக்காது. தமிழக அரசின் சில முக்கிய ஷரத்துக்கள் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் போவதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+