கேபிள் டிவியை அரசுடைமையாக்க வேண்டும்-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:கேபிள் டிவி இணைப்புகளை அரசே மேற்கொண்டால் மதுக்கடை வருமானத்தை விட அதிக வருமானம் வருவதோடு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணைப்பை கொடுக்க முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,

கேபிள் டிவி இணைப்பை சலுகை கட்டணத்தில் வழங்கினால் ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும். மாநில அரசு மக்களுக்காக கேபிள் டிவி இணைப்பை கொடுப்பதற்கும் மத்திய அரசு தடையாக இருக்காது.

ஏற்கனவே கேபிள் டிவி நடத்தும் சில தனியார்கள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

மாநில அரசுக்கு இந்த விஷயத்தில் வானளாவிய அதிகாரம் உள்ளது. குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு இணைப்பு வழங்கும் கடமை மாநில அரசுக்கு உள்ளது. இதை சுட்டிக்காட்டி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்தது வரவேற்கத்தக்ககது. இத்தகைய செயல்பாட்டால் ஜனநாயகம் செழிக்கும். இதே போல் சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை தனியாரிடம் விடாமல் மாற்று கருத்துக்கு மதிப்பளித்து அரசில் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட முதல்வருக்கு நன்றி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+