இந்து மத பிரார்த்தனையுடன் தொடங்கிய அமெரிக்க செனட்
வாஷிங்டன்: அமெரிக்கா செனட் சபை இந்து மத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
208 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தச் சபையில் இந்து முறையிலான பிரார்த்தனை நடந்தது இதுவே முதல் முறையாகும்.
வடக்கு நெவாடா இந்து சங்கத்தின் புரோகிதரான ராஜன் நேற்று இந்த பிரார்த்தனையை செய்தபோது அங்கிருந்த சில கிறிஸ்துவ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரார்த்தனை முடியும் வரை அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மந்திரங்கைள ஓதி பின்னர் ஆங்கிலத்தில் பிரார்த்தனையை நடத்தினார் ராஜன். உலகம், ஆகாயம், சொர்க்கம் உள்பட எங்கும் நிறைந்துள்ள இறைவனை வணங்குவோம். இறைவன் நம் மனங்களை ஒளிரச் செய்யட்டும், மாயையிலிருந்த நம்மை உண்மை நிலைக்கு கொண்டு செல்லட்டும், இருட்டிலிருந்து வெளிச்சத்தை காட்டட்டும், என்றும் இறவாத நிலையை நமக்கு அளிக்க வேண்டுவோம் என அவர் பிரார்த்தனை செய்தார்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி நெவாடா மாகாண சபையிலும், மே மாதம் நெவாடா செனட் சபையிலும் இந்து மத பிரார்த்தனை நடத்தியுள்ளார் ராஜன்.












Click it and Unblock the Notifications