கன்னியாகுமரி-கோஷ்டி மோதலில் வெடிகுண்டு வீச்சுமீனவர்கள் வீடுகளில் போலீஸ் சோதனை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டத்தில் போலீஸார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மீனவர்கள் வீடுகளில் போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அப்போது 2 கோஷ்டிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பங்கேற்க பொன்னந்தோப்பு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பு தாக்கியது. இதையடுத்து மீண்டும் 2 கோஷ்டிகளும் அரிவாள், கத்திகளுடன்மோதிக் கொண்டன.
தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
அப்போது திடீரென சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் மீனவர்கள் தரப்பில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று டிஎஸ்பி பிரசன்னா முன் விழுந்து வெடித்தது. இதில் பிரசன்னா காயமின்றி தப்பிவிட்டார்.
இந்த சம்பவத்தில் போலீஸார் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் ரப்பர் குண்டுகளாலும் துப்பாக்கி சூடு நடத்தி கலைய வைத்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முட்டம், பொன்னந்தோப்பு, மேலமூட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மீனவர்களின் வீடுகளில் வெடிகுண்டு பதுக்கி வைத்துள்ளனரா என போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
இதனால் வீடுகளை விட்டு பெண்கள், குழந்தைகள் வெளியேறி வருகின்றனர்.இந்தக் கலவரம் தொடர்பாக 200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந்தப் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications