ஹனீப் மீது பொய் வழக்கு-மனைவி குமுறல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

எனது கணவர் டாக்டர் முகம்மது ஹனீப் மீது பொய்யான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நியாயமற்றது, ஆதாரமற்றது என்று ஹனீப்பின் மனைவி பிர்தோஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீஸார் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்பைக் கைது செய்துள்ளனர். கடந்த 12 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தி வந்த அவர்கள், ஹனீப்புக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நேற்று கூறினர்.

இதையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்து உதவியதாக ஹனீப் மீது ஆஸ்திரேலிய போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

Haneef Firthos

இதற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல மனித உரிமை அமைப்புகள், ஹனீப்பின் வழக்கறிஞர் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஹனீப் மீதான வழக்கு நியாயமற்றது, பொய் வழக்கு என்று அவரது மனைவி பிர்தோஸ் கூறியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தனது வீட்டில் பிர்தோஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது முற்றிலும் ஆதாரமற்ற, அடிப்படையற்ற, நியாயமற்ற வழக்கு.

12 நாட்களாக அவரை விசாரித்து வந்த ஆஸ்திரேலிய போலீஸார் ஏன் இப்போது இப்படி ஒரு வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். எனது கணவர் அகமது சகோதரர்களிடம் சிம் கார்டை கொடுத்தது, முதல் நாள் விசாரணையிலேயே போலீஸாருக்குத் தெரியும். அப்படி இருக்கையில் இத்தனை நாட்களாக காத்திருந்து விட்டு இப்போது அதை ஒரு குற்றச்சாட்டாக கூறி வழக்குப் பதிவு செய்தது ஏன்.

எனது கணவர் மீது எந்தக் குற்றத்தையும் காண முடியாத நிலையில், இந்த பொய் வழக்கை அவர்கள் போட்டுள்ளனர். எனது கணவர் விரைவில் திரும்புவார் என்று ஆவலோடு இருந்தேன். ஆனால் இப்படி ஒரு வழக்கைப் போட்டு எனது கனவைத் தகர்த்து விட்டது ஆஸ்திரேலிய போலீஸ் என்று கூறினார் பிர்தோஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+