மதுரையில் ரூ.1,400 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஸ்டாலின்
மதுரை:மதுரை நகர்ப்புற வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1,400 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வைகை அணையிலிருந்து 2வது குடிநீர் திட்டம், பழங்காநத்தம் ரயில்வே மேம்பாலம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் இந்த திட்டப் பணிகள் குறித்தும், பிற வளர்ச்சிப் பணிகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாநகர மேயர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மாட்டுதாவணி பேருந்து நிலைய விரிவாக்கம், சென்ட்ரல் மார்கெட் பிரச்சனை ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
புதிய அரசு மருத்துவமனை
மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக் காய பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கடும் இடம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதை சமாளிக்க 6 மாடிகள் கொண்ட புதிய அவசர சிகிச்சை பிரிவு கட்டப்பட உள்ளது. இதில் மொத்தம் 300 படுக்கையை கொண்டதாக இருக்கும். இதில் 5 மற்றும் 6வது மாடிகள் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருக்கும். இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்காக மாநகராட்சியிடம் உள்ள அண்ணா பேருந்து நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின்,
அனைத்துப் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இவையனைத்தும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications