து.ஜனாதிபதி பதவிக்கு போட்டியில்லை: நாராயணமூர்த்தி
Subscribe to Oneindia Tamil
சென்னை:துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை வந்த நாராயண மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழிலதிபர்களுக்கு அரசியலில் இடம் கிடையாது. துணை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக வரும் வதந்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லை.
+ |
இந்திய அரசியலில் தொழில் நிறுவனங்களைச் ேசர்நதவர்களுக்கு எந்த அங்கமும் இருக்கக் கூடாது. மாறாக வாடிக்கையாளர்களுடனான நெருக்கத்தை அதிகரிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக நிலவி வரும் குழப்பங்கள் குறித்த கேள்விக்கு, இதற்கு பதிலளிக்க நான் சரியான ஆள் அல்ல என்றார் நாராயணமூர்த்தி.
+











Click it and Unblock the Notifications