சென்னையில் வசிக்கும் பாக். பெண்கள்மீது தீவிர கண்காணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது போலீஸார் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் நாட்டுப் பெண்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்ப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டவர் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில் 38 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 8 பேரைத் தவிர அனைவரும் பெண்கள். இவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாகிஸ்தான் ஆண்களை மணந்து பாகிஸ்தானில் குடியேறியவர்கள்.

தங்களது கணவர்கள் இறந்த பின்னர் மீண்டும் சென்னைக்கேத் திரும்பி வந்து வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைத் தாண்டியவர்கள். நீண்ட கால விசாவின் கீழ் இவர்கள் சென்னையில் வசிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இவர்களுக்கும், பாகிஸ்தானில் தற்போது வசித்து வரும் பல உறவினர்களுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் அடிக்கடி சென்னைக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து போய்க்கொண்டுள்ளனர்.

எனவே இவர்கள் மூலமாக சென்னைக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடக் கூடாது என்பதற்காக சென்னையில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+