புதுக்கோட்டை சிறை வளாகத்துக்குள் 3 சடலங்கள்!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்துக்குள் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்தன.
30 வயது மதிக்கத்தக்க பெண்ம், 8 வயது சிறுவன், 5 வயது சிறுமி ஆகியோரின் உடல்கள் அங்கு கிடந்தன. இவர்களைப் பற்றிய விபரம் இன்னும் தெரியவில்லை.
போலீஸ் பாதுகாப்பு மிக்க இந்த வளாகத்துக்குள் எப்படி 3 சடலங்கள் வந்தன என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் இவர்களை கொலை செய்து சடலத்தை இங்கு போட்டுவிட்டார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.
சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications