அக்டோபர் முதல் ராமர் பாலத்தில் கால்வாய் தோண்டும் பணி
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆதாம் பாலத்தின் (ராமர் பாலம்) தெற்குப் பகுதியில் கால்வாய் வெட்டும் பணி அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என சேது சமுத்திரக் கழகத்தின் தலைவரும், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவருமான ரகுபதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆதாம் பாலத்தின் தெற்குப் பகுதியில், கால்வாய் வெட்டும் பணி அக்டோபரில் தொடங்கும்.
வானிலை சரியில்லாத காரணத்தால், ஏப்ரல் மாதம் முதல் ஆதாம் பாலத்தின் தெற்குப் பகுதியில் கால்வாய் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் அக்டோபர் முதல் கால்வாய் வெட்டும் பணி தொடங்கும்.
மீனவர்களின் வலைகளில் ராட்சத மீன்கள் சிக்குவதில் வியப்பேதும் இல்லை. கால்வாய் வெட்டுவதால்தான் இது நிகழ்வதாக கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications