டாக்டர் ஹனீப் மீண்டும் கைதுவிசாவும் ரத்து-விடுதலை ஆவதில் சிக்கல்
கான்பெரா:ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப் சில மணி நேரங்களிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் ஜாமீனில் விடுதலையாக முடியாத நிலை உருவாகியுள்ளது.
இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். அவரை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்த ஆஸ்திரேலிய போலீஸார், ஹனீப்புக்கு எதிராக ஒரு ஆதாரமும் கிடைக்காமல் திணறினர்.
![]() |
இதையடுத்து அவர் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், அவர் மீது தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு கொடுத்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹனீப் சார்பில் ஜாமீன் கோரி பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், ஹனீப்புக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் வழக்கு முடியும் வரை வாரம் 3 முறை செளத் கோர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்ட சில மணி நேரங்ளிலேயே ஹனீப்பை மீண்டும் ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹனீப்பால் ஜாமீனில் வெளியே வர முடியாத நிலையை ஆஸ்திரேலிய போலீஸார் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் கூறுகையில், இங்கிலாந்து தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் ஹனீப்புக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
டாக்டர் ஹனீப், குணாதிசய சோதனையில் தோல்வி அடைந்து விட்டார். குடியேற்றச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அதை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவேதான் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹனீப் மீதான தற்போதைய வழக்கிற்கும், விசா ரத்து நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் மீதான வழக்கு நியாயமான முறையில் நடைபெறும்.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கருதியே அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
விசா ரத்து செய்யப்பட்டு விட்டதால் சிட்னியில் உள்ள வில்லாவுட் குடியேற்றத் துறை காவல் மையத்தில் ஹனீப் அடைக்கப்படவுள்ளார்.
ஆஸ்திரேலிய போலீஸ் மற்றும் அரசின் இந்த குழப்பமான நடவடிக்கைகள் காரணமாக ஹனீப் தரப்பு பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications