பாஸ்போர்ட் விசாரணை: காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு...உடனடி தீர்வு
திருநெல்வேலி:
-இசக்கி ராஜன்
திருநெல்வேலியில் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்து விசாரணை செய்யாத காவல்துறையை கண்டித்து, போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியன் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இக்கொலை தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யபட்டனர்.
இதை தொடர்ந்து இப்பகுதி பதட்டமாகவே இருந்து வந்தது. இந் நிலையில் த.மு.மு.க. பிரமுகர் மைதீன் சேட்கான் என்பவரை ஒரு கும்பல் வெட்டியது. இதில் அவர் உயிர் தப்பிவிட்டார். இந்த இரு சம்பவங்களால் பல்வேறு அசம்பாவிதங்கள் இப்பகுதியில் நடந்தேறியவண்ணம் உள்ளன. கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களுக்குப்பின் தென்காசி பகுதியில் பல இஸ்லாமிய இளைஞர்கள் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்துள்ளனர். அந்தப் படிவங்களை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் காவல்துறையினரின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் காவல் துறையினர் இந்த விண்ணப்பதாரர்கள் குறித்து விசாரிக்காமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து தென்காசியை சேர்ந்த இஸ்லாமி இளைஞர்கள் தென்காசி காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இத்தகவலை அறிந்த உளவு பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து அவசர, அவசரமாக சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களிடம் காவல்துறையினர் பேசி சமாதான முயற்சியில் இறங்கினர். இதையடுத்து தேக்கத்தில் இருந்த விண்ணப்பங்களை விசாரணை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications