காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது-மன்மோகன்சிங்
காஷ்மீர்: இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்க யாராலும் முடியாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
![]() |
ஜம்மு பல்கலைகழகம் சார்பில் பிரதமருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்டு பிரதமர் பேசியதாவது.
சுமார் 60 ஆண்டு கால பிரச்சனையில் தற்போது தான் தீர்வு காணக்கூடிய வகையில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இரு நாடுகளின் நட்புறவில் ஒரு அத்தியாயம் நிகழப் போகிறது.
காஷ்மீர் மாநிலம் இரு நாடுகளுக்கிடையே முக்கிய அடையாளச் சின்னமாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஏற்கனவே பலமுறை சொல்லியபடி, எல்லைக் கோட்டை மாற்ற முடியாது. அது தேவையற்ற செயலாகும்.
இதன்மூலம் பிரித்து தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை சமாதான கோடாக மாற்ற முடியும். இப்போது நடைபெறும் வன்முறைகளை தடுப்பதன் மூலமும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதன் மூலமும்தான் இந்த சமாதானக் கோடு சாத்தியமாகும்.
அமைதியை விரும்பும் மாநிலத்தில் தீவிரவாத அச்சுறுத்தலை அடியோடு அழிக்க உறுதியாக இருக்கிறோம். இதில் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் எங்கள் தரப்பிலிருந்து தாக்குதல் தொடரும் எனவும் எச்சரிக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்













Click it and Unblock the Notifications