மாஞ்சோலை நினைவு தினம்: நெல்லையில் பேரணி
மதுரை:
நெல்லையில், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் 17 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலியான சம்பவத்தின் 9வது ஆண்டு நினைவு தினமான ஜூலை 23ம் தேதி நெல்லையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த துயரச் சம்பவத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் வருகிற 23ம் தேதி தொழிலாளர் மீட்பு தினமாக அனுசரிக்கப்படும்.
இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் 17 தியாகிகளின் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு எம்.பிக்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் இரங்கல் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறும் என்றார் கிருஷ்ணசாமி.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் உள்ளது பாம்பே-பர்மா வர்த்தக கழகம். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கேட்டுப் போராடினார்கள்.
தங்களது கோரிக்கைய வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நெல்லையில் பேரணி நடத்தினர். அப்போது போலீஸார் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதையடுத்து அலறி ஓடிய தொழிலாளர்களில் பலர் தாமிரபரணி ஆற்றில் விழுந்தனர். அவர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சோக நிகழ்ச்சியை புதிய தமிழகம் கட்சி ஆண்டுதோறும் பேரணி, பொதுக் கூட்டத்துடன் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications