கொட்டும் மழையில் ஓட ஓட விரட்டிமந்திரவாதி வெட்டிக் கொலை
சென்னை:சென்னை தண்டையார்பேட்டையில், மந்திரவாதி ஒருவர் கொட்டும் மழையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
தண்டையார்ப்பேடையில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷேக் பரீத் (37). இவர் மந்திர, தந்திரங்கள் தெரிந்தவர் என்பதால் அவரிடம் பலரும் மந்திராலோசனை பெற வருவார்களாம்.
கொருக்குப்பேட்டையில் இதற்காக ஒரு அலுவலகம் அமைத்து மந்திர ஆலோசனை சொல்லி வந்தார் பரீத். இவருக்கு ஷெரீனா பானு என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மாலை 5 மணிக்கு தனது அலுவலகம் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்புவாராம் பரீத்.
ஷேக் பரீத் வசித்து வந்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஏதோ ஒரு பிரச்சினைக்காக ஷர்மிளா, ஷேக் பரீத்திடம் ஆலோசனை கேட்க வந்தார். அப்போது அவரது அழகியில் மயங்கி பரீத், தனது மந்திரப் பேச்சால், ஷர்மிளாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இருவரும் சில காலமாக நெருங்கிப் பழகி வந்தனர்.
இந்த நிலையில் ஷர்மிளா, ஷேக் பரீத்தின் தொடர்பு ஷர்மிளாவின் கணவர் நைனார் முகம்மதுவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரும், ஷர்மிளாவின் சகோதரர்கள் ரஷீத் இக்பால், ரஹமத்துல்லா ஆகியோர் ஷர்மிளாவைக் கண்டித்துள்ளனர்.
ஆனால் ஷர்மிளா அதைக் கண்டுகொள்ளாமல் தனது குழந்தையை நைனார் முகம்மதுவின் வீட்டில் விட்டு விட்டு நிரந்தரமாக ஷேக் பரீத்துடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.
இதனால் நைனார் முகம்மது கொதிப்படைந்தார். நேற்று இரவு பத்தரை மணியளவில் ஷேக் பரீத் தனது அலுவலகத்தை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது நல்ல மழை. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஷேக் பரீத்தை, ஒரு மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இதை எதிர்பார்க்காத பரீத் அங்கிருந்து தப்பி ஓடினார். கொட்டும் மழையில் அந்தக் கும்பல் ஷேக் பரீத்தை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ஷேக் பரீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன மழை பெய்ததால் தெருவில் யாரும் இல்லாதது கொலைகாரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. மழை நின்ற பின்னர் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது ஒருவர் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஷர்மிளாவின் கணவர் மற்றும் சகோதரர்கள் ஏவி விட்ட கூலிப் படை ஷேக் பரீத்தைக் கொன்றதா அல்லது வேறு காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷேக் பரீத்துக்கு ஷர்மிளா தவிர வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்தப் பெண்கள் தொடர்பானவர்கள் ஷேக் பரீத்தைக் கொன்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications