தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை!
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி மீனவர்களிடையே அச்சம் நிலவுகிறது.
தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று இரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவர்கள், உடனடியாக இங்கிருந்து ஓடி விடுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள அங்கிருந்து விரைந்து கரைக்குத் திரும்பினர்.
இலங்கைக் கடற்படையினர் இப்படி தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் நிம்மதியாக மீன் பிடித் தொழிலை செய்ய முடியாமல் பெரும் தடங்கல் ஏற்படுவதாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications