மாணவி முடியை வெட்டிய ஆசிரியை டிஸ்மிஸ்த. ஆசிரியருக்கு தண்ணி இல்லா காடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:இரட்டை ஜடை போட்டு வராமல் ஒற்றை ஜடையுடன் வந்த மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியை பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆசிரியையின் செயலைத் தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் சுலோசனா (14) என்ற மாணவி, ஒற்றை ஜடை போட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஷகீலா, மாணவி சுலோசனாவின் தலைமுடியை வெட்டினார். இதனால் அவமானமடைந்த சுலோச்சனா, பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சுலோச்சனாவின் பெற்றோர் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமானுஜம், நேரில் வந்து தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை ஷகீலா, மாணவி, அவரது தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

பாமக எம்.எல்.ஏக்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், மூர்த்தி, மறைமலை நகராட்சித் தலைவர் சசிகலா ஆகியோரும் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் ஷகீலா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவரை ஆசிரைய பணியில் நியமித்த பெற்றோர் ஆசிரியர் கழகமே ஷகீலாவை டிஸ்மிஸ் செய்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உடனடியாக இடமாறுதல் உத்தரவு அவரது கையில் கொடுக்கப்பட்டு விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+