மகன் செய்த சிசேரியன்-மணப்பாறை டாக்டர் தம்பதிக்கு நிபந்தனை ஜாமீன்!
மணப்பாறை:மணப்பாறையில் தங்களது மகனை விட்டு பெண்ணுக்கு சிசேரியன் செய்ததால் கைது செய்யப்பட்ட டாக்டர் தம்பதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மணப்பாறையில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் முருகேசன்-காந்திமதி தம்பதியினர். டாக்டர் முருகேசன், கின்னஸ் சாதனைக்காக தனது மகன் திலீபனை தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு சிசேரியன் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வைத்திருந்தார்.
![]() |
தனது மகன் செய்ததை சாதனையாக நினைத்து, மணப்பாறையில் நடந்த ஐ.எம்.ஏ. கூட்டத்தில் அந்த வீடியோ படத்தை எல்லோருக்கும் போட்டு காட்டினார். ஆனால் அவர் நினைத்த மாதிரி கின்னஸ் சாதனை நடக்கவில்லை.
அதற்கு மாறாக, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அவரை போலீஸ் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்து உள்ளே போட்டது. அவர் நினைத்த சாதனை, அவருக்கு சோதனையாக முடிந்துவிட்டது.
சிறுவன் திலீபன்ராஜ் சிறுவர் நீதிகுழுமத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றான்.
![]() |
ஆனால் அவனின் தந்தை டாக்டர் முருகேசன் பலமுறை முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந் நிலையில் திருச்சி செஷன்ஸ் நீதிமன்றத்தில் டாக்டர் தம்பதியினரின் வக்கீல் மார்ட்டின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தங்ககனி, தம்பதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அதன்படி இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க ஜாமீன் வழங்க வேண்டும் மற்றும் தினசரி மணப்பாறை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications