வேலைக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ்:ஊழியர்களுக்கு என்எல்சி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி:என்எல்சி காண்ட்ராக்ட் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் அனைவரும் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நேற்றிலிருந்து 13,000 க்கும் மேற்பட்ட என்எல்சி தாங்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு ஆகியவற்றை முன்னிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இன்றும் 2 நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந் நிலையில் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் சம்பள பிடித்தம், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆனால் தொழிற்சங்கங்கள், இந்த மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்று கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications